↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
எதிர்வரும் தீபாவளி திருநாளில் விஜய் நடித்த கத்தி, விஷால் நடித்த பூஜை ஆகிய திரைப்படங்கள் வெளிவரும் என்று உறுதியாக அறிவிக்கப்பட்ட நிலையில் ஷங்கரின் 'ஐ' திரைப்படம் வெளிவருமா? இல்லையா என்பது குறித்து இன்னும் அதிகாரபூர்வ தகவல் வெளிவரவில்லை. இந்நிலையில் விஜய்யின் கத்தி படத்துடன் மோத விரும்பாமல் ஐ இயக்குனர் ஷங்கர் பின்வாங்கிவிட்டதாக விஜய் தரப்பில் இருந்து செய்தி வெளியாவதால் ஷங்கர் தரப்பு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
பாடல் வெளியீட்டு விழாவை அடுத்தடுத்து நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியது , கத்தி, ஐ படங்களின் டீஸர் பார்த்தவர்களின் எண்ணிக்கை ஒப்பிட்டு செய்திகள் வெளிவருவது , ஐ பாடல் வெளியீட்டு விழாவை விஜய் புறக்கணித்தது என ஆரம்பத்தில் இருந்தே ஷங்கருக்கும் விஜய்க்கும் மோதல் இருந்து வருகிறது. இந்நிலையில் 'ஐ' பட ஆடியோ விழாவிற்கு விஜய்யை அழைக்காததால், விஜய் ரசிகர்கள் 'ஐ' படத்தை புறக்கணிக்க உள்ளதாக சில நாட்களுக்கு முன்னர் சமூக வலைத்தளத்தில் செய்திகள் வெளிவந்தன.
உண்மையில் ஷங்கர் 'ஐ' படத்தை தீபாவளிக்கு திரையிடுவதாகத்தான் திட்டம் போட்டிருந்தார். ஆனால் கிராபிக்ஸ் பணிகள் தாமதமாவதால் பட ரிலீஸ் தள்ளிப்போகும் சூழ்நிலை உள்ளது. ஆனால் இந்த தாமதத்தை விஜய் ரசிகர்கள் வேறுவிதமாக விளம்பரப்படுத்துவது ஷங்கரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஆனால் தற்போது இன்னும் சில கோடிகள் செலவானாலும் பரவாயில்லை. இரவு பகலாக கிராபிக்ஸ் பணிகளை முடித்து படத்தை எப்படியாவது தீபாவளிக்கு வெளியிட வேண்டும் என்ற வெறியில் ஷங்கர் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. தியேட்டர் உரிமையாளர்களும் 'ஐ' தீபாவளிக்கு ரிலீஸாவது உறுதியானால் ஷங்கர் கேட்கும் அனைத்து தியேட்டர்களையும் ஒதுக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளதால், தேவையில்லாத சிக்கல்களை விஜய் இழுத்துக்கொண்டுவிட்டதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.
Home
»
cinema
»
cinema.tamil
»
vijay
» ஷங்கரை சீண்டும் விஜய் ரசிகர்கள். 'கத்தியுடன் நேரடியாக மோதுகிறது 'ஐ'?
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment