↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

ரஜினிபற்றி ஒரு மீள்பார்வையில் நாம் யோசிக்கலாம். மற்ற நடிகர்களையும் ரஜினியையும் வேறுபடுத்திக் காட்டும் தன்மை என்னவென்றால், ரஜினியிடம் இருக்கும் ஒரு மின்காந்த வசீகரம். அதனால்தான் ஒரு சிறிய குழந்தைகூட ரஜினியைப் பார்த்தால் குதூகலம் அடைகிறது.


இயல்பே அழகு 


உலக அளவில் இதே போன்ற வசீகரத்தைக் கொண்டவராக இருந்தவர் மைக்கேல் ஜாக்ஸன். அவரைப் பார்த்த மாத்திரத்தில் ரசிகர்கள் பரவசம் அடைந்தார்கள். ஆனந்த மிகுதியில் கண்ணீர் விட்டார்கள். அப்பேர்ப்பட்ட மைக்கேல் ஜாக்ஸனைவிட ஒரு விதத்தில் ரஜினி சிறந்து விளங்கினார். எப்படியென்றால், ஒரு தேவதூதனைப் போல் கொண்டாடப்பட்ட மைக்கேல் ஜாக்ஸன், தன்னுடைய கருப்புத் தோலை மாற்றிக்கொள்வதற்காக என்னென்னவோ முயற்சிகளை மேற்கொண்டு, அதன் காரணமாகவே பலவித சரீர உபாதைகளுக்கு உட்பட்டு, கடைசியில் அதற்கே பலியானார். அதுவும் 51 வயதில். 


ஆனால், ரஜினி வேறு எந்தப் பிரபலமும் செய்யத் துணியாத காரியத்தைச் செய்தார். வழுக்கைத் தலை, நரைத்த முடி, உதட்டில் சிகரட் தழும்பு என்று தன் நிஜமான உருவத்துடனேயே தோற்றம் அளிப்பதில் அவர் எந்தக் கவலையும் அடையவில்லை. அதிலும் தமிழ்நாட்டில் 50 வயதுக்கு மேற்பட்ட எந்தப் பிரமுகரையும் தலைச் சாயம் இல்லாமல் பார்க்க முடியவில்லை. தமிழர்களுக்கு மட்டும் தலைமுடி கருக்காதோ என்று மற்றவர்கள் நினைக்கும் அளவுக்கு 


‘சாய வியாதி’ பரவியிருக்கும் இந்தக் காலத்தில் உடம்பையும் தோற்றத்தையும் மூலதனமாகக் கொள்ள வேண்டிய நடிப்புத் தொழிலில், தன் தோற்றம் குறித்த எந்தக் கவலையும் இல்லாமல் இருக்க, மிகப் பெரிய மனோபலம் வேண்டும். அது ரஜினியிடம் இருந்தது. 


“அதெல்லாம் சினிமா டயலாக்” 


ஆனால், இந்த அளவுக்கு மனோபலம் கொண்ட ரஜினிதான், அரசியலுக்கு வருவதுபற்றி ஏன் கடந்த 25 ஆண்டுகளாக எதுவுமே சொல்லாமல் தன் ரசிகர்களைப் பதற்றத்திலேயே வைத்திருந்தார்!  

Continue to read

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top