படங்களில் நடித்து தான் பிழைப்பு நடத்த வேண்டும் என்ற அவசியம் தனக்கு இல்லை என நடிகை கார்த்திகா தெரிவித்துள்ளார். ராதாவின் மகள்கள் கார்த்திகாவும், துளசியும் அம்மா வழியில் நடிகைகள் ஆகிவிட்டனர். கார்த்திகா நடிக்க வந்து 5 ஆண்டுகள் ஆகியும் அவருக்கு பெரிதாக பெயர் கிடைக்கவில்லை. துளசி நடித்த 2 படங்களும் ஓடவில்லை. இந்நிலையில் தனது சினிமா பயணம் குறித்து கார்த்திகா கூறுகையில்,
நான் நடிக்கும் கதாபாத்திரங்களை கவனமாக தேர்வு செய்கிறேன். என் பட இயக்குனர்கள் அனைவரும் தங்களது முதல் தேர்வு நான் தான் என்று கூறினர். 2009ம் ஆண்டு தெலுங்கு படமான ஜோஷில் அறிமுகமான பிறகு தமிழ் மற்றும் மலையாள படங்களில் பிசியாகிவிட்டேன். நான் இயக்குனர்கள் கே.வி. ஆனந்த், பாரதிராஜா உள்ளிட்டவர்களின் படங்களில் நடித்துள்ளேன். என் சினிமா பயணம் மெதுவாக செல்வதில் எனக்கு வருத்தம் இல்லை.
நான் படங்களை பார்த்து பார்த்து தேர்வு செய்வதற்கு காரணம் உள்ளது. படத்தில் நடித்து தான் பிழைப்பு நடத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதனாலேயே படத் தேர்வில் கவனமாக உள்ளேன். நான் நடிப்பை கற்றுக் கொள்ள எந்த பள்ளிக்கும் செல்லவில்லை. எனக்கு தெரிந்த நடிப்பு எல்லாம் என் அம்மாவால் தான். அவர் தான் என் குரு என்றார் கார்த்திகா.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.