↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
விஜய், சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வரும் தீபாவளிக்கு 'கத்தி' திரைப்படம் வெளியாவது உறுதியாகிவிட்டது. இந்நிலையில் கத்தி படத்திற்கு போட்டியாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் 'ஐ' திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்த்திருந்த நிலையில் 'ஐ' திரைப்படம் தற்போது வெளியாவதில் காலதாமதம் ஏற்படலாம் என செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
ஆனால் 'ஐ' படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் 'ஐ' திரைப்படத்தை கண்டிப்பாக தீபாவளியில் வெளியிட்டே தீருவோம் என்று கூறியுள்ளார். மேலும் 'ஐ' படத்தின் வெளியீடு காலதாமதம் ஆகும் என விஜய் தரப்பே வதந்தி கிளப்பிவிடுவதாக தற்போது திடுக்கிடும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
ஆரம்பத்தில் இருந்தே 'ஐ' படத்திற்கு கொடுக்கப்படும் அதீத விளம்பரத்தால் விஜய் எரிச்சலடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதை மேலும் நிரூபிப்பது போல 'ஐ' படத்தின் ஆடியோ விழாவிற்கு விஜய் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 'ஐ' படத்தின் ஆடியோ வெளியீட்டு நாளில் 'கத்தி' மேக்கிங் வீடியோவை வெளியிட்டு தமிழ்த்திரையுலகை தனது பக்கம் திருப்ப விஜய் முயற்சி செய்தார். மேலும் 'ஐ' படத்தின் பாடல் வெளியீட்டு விழா பிரமாண்டமாக பேசப்பட்டதால் அதற்கு அடுத்த இரண்டே நாள் இடைவெளியில் 'கத்தி' ஆடியோவை வெளியிட்டு பரபரப்பை தனது பக்கம் திருப்ப முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனாலும் தற்போதைய நிலையில் 'ஐ' படம் வெளியாவது உறுதியானால் கண்டிப்பாக கத்திக்காக புக் ஆகியிருக்கும் பல தியேட்டர்கள் கைமாறும் நிலை உள்ளதாக கூறப்படுகிறது. இது விஜய் தரப்பில் மேலும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. எனவே ஏதாவது புரளியை கிளப்பி 'ஐ' படத்தின் ரிலீஸை தள்ளி வைக்க பல முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
Home
»
cinema
»
cinema.tamil
»
vijay
» 'ஐ' வெளியிட்டை தள்ளிப்போட விஜய் சதி செய்தாரா? திடுக்கிடும் உண்மை அம்பலம்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment