ஒரு வழியாக கத்தி படத்தின் பிரச்சனை அனைத்தையும் முடித்துவிட்டு ரிலீசுக்கு தயாராகிவிட்டார் ஏ.ஆர்.முருகதாஸ். தினசரி பத்திரிக்கைக்கு பேட்டியளித்திருந்த முருகதாஸ் கத்தி படத்தை பற்றி சில சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதாவது, இதுவரை நான் நிறைய கமர்ஷியல் படங்களை இயக்கிவிட்டேன், அதில் எனக்கு மிகவும் பிடித்தது ரமணா படம் தான், அந்த படத்தை மிஞ்சும் அளவுக்கு கத்தியை உருவாக்க வேண்டுமென்று விரும்பினேன்.
எனது உதவி இயக்குநர்களும், பல டெக்னீஷியன்களும் இந்த படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறோம். துப்பாக்கியை விட பல மடங்கு கத்தியை கூர்மையாக்கி வைத்திருகிறோம், அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் விஜய்யின் ஒரு வித்தியாசமான புதுமுகத்தை நீங்கள் பார்க்கலாம், துப்பாக்கி படம் ஒரு சஸ்பென்சுடன் சென்று இறுதியில் நச்சென்று முடித்திருப்பேன். ஆனால் கத்தியில் நிதானமான மக்களுக்கு புரியும்படி ஒரு விழிப்புணர்ச்சியை தர முயன்றிருக்கிறேன். விஜய் ரசிகர்களுக்கு துப்பாக்கி மாஸ் என்றால், கத்தி க்ளாஸ்சாக இருக்கு….
முதன் முதலாக ஒரு இரட்டை கதாபாத்திர கொண்ட கதை இயக்குவதால் விஜய்க்கு எந்தவித கெட்டப் பெயரும் வந்துவிடக்கூடாது என்று உன்னிப்பாக கவனித்து கவனித்து இந்த கத்தியை உருவாக்கியிருக்கிறேன். இது மக்களிடத்தில் தனித்து நின்று வெற்றிபெரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த படம் சமந்தாவுக்கு தமிழில் ஒரு நல்ல இடத்தை பெற்று தரும் என்று கூறியிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.
இன்னும் இரண்டு நாட்கள்தான் இருக்கிறது கத்தி படம் திரைக்கு வர, எல்லா விஜய் ரசிகர்களுக்கும் நாளையிலிருந்தே தீபாவளி ஆரம்பம்தான்…
0 comments:
Post a Comment